வெள்ளவாரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை எம்.எல்.ஏ. ஆய்வு

திண்டிவனத்தில் வெள்ளவாரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்.;

Update:2022-08-05 22:27 IST

திண்டிவனம்:

திண்டிவனம் அய்யந்தோப்பு விநாயகர் கோவில் பின்புறம் ஏரிக்கு செல்லும் வெள்ளவாரி வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் வசந்தகிருஷ்ணன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் நோட்டீசு வழங்கப்படும் என்றார். ஆய்வின்போது அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன், முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் செல்வம், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் நாகேஸ்வரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்