தாய் மற்றும் 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

கன்னியாகுமரி அருகே தாய் மற்றும் இரண்டு மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.;

Update:2023-08-10 20:45 IST

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே அழகப்பபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த அனிதா தனது மகள்கள் சகாய வித்யா, சகாய பூஜா மவுலியாவுடன் வசித்து வந்தார். அனிதாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில் வீட்டு வேலை மற்றும் கூலி வேலை செய்து தனது மகள்களை படிக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் காலை வெகுநேரம் ஆகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, அனிதா மற்றும் இரண்டு மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிச்சியடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்