மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தாா்.;

Update:2022-07-13 23:07 IST


கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் காமதேனு நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரே நீலமங்கலம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக கூத்தக்குடி நோக்கி கருணாபுரத்தை சேர்ந்த அகிலேஷ் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரின் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்