கபிஸ்தலம்:
கபிஸ்தலம் முதலியார் தெருவில் வசிப்பவர் ஆனந்தன் (வயது52). நெசவுத் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து இருந்தார். பின்னர் காலை வழக்கம் போல் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் அதை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்தன் உடனடியாக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.