நகராட்சி ஆணையாளர், மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆய்வு
வால்பாறையில் கோடை கோடை விழா நடைபெறுகிறது. நகராட்சி ஆணையாளர், மாவட்ட தி.மு.க. செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.;
தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட கலெக்டர் ஆலோசனையின்படி வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மற்றும் 27, 28 -ந் தேதிகளில் கோடை விழா நடைபெறுகிறது.
அங்கு வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
படகு இல்லத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி முடிந்துள்ளது.
மேலும் படகு இல்லத்தை சுற்றி தூய்மை பணி, வர்ணம் பூசும் பணி, தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் பணிகளும் நடை பெற்று வருகிறது.
இந்த பணிகளை கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகே சன், நகராட்சி ஆணையாளர் (பொ) வெங்கடா சலத்தை சந்தித்து பேசி விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் விழா நடைபெறும் இடம் படகு இல்லம், தாவரவியல் பூங்கா மற்றும் நகரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து தற்போது அடிக்கடி மழை பெய்வதால், விழா மேடை மற்றும் பந்தலுக்குள் ஒழுகாத வகையில் பந்தல் அமைக்க வேண்டும்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார், வால்பாறை நகர செயலாளர் சுதாகர் மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.