சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொ) ஹரிஹரன் முன்னிலை வகித்தார். இதில், இலவச மின்சாரத்தை விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆகவும், 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட் மின்சாரத்திற்கு 50 சதவீதம் மின் கட்டணத்தை குறைத்தும் வழங்கி உத்தரவிட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, சங்கரன்கோவில் பகுதியில் மிக பிரதான தொழிலான விசைத்தறி தொழிலுக்கு உள்ள தேவைகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்த தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், மேலாளர் மாரியம்மாள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.