முத்து காளியம்மன் கோவில் குடமுழுக்கு

ராதாநல்லூர் தோட்டம் முத்து காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது;

Update:2022-09-08 23:34 IST

திருக்கடையூர்:

காலமநல்லூர் ஊராட்சியில் ராதாநல்லூர் தோட்டத்தில் உள்ள முத்துக்காளியம்மன் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் விமான கலச கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்