சென்னை எண்ணூரில் கடலில் மிதந்து வந்த மர்மபொருளால் பரபரப்பு

சென்னை எண்ணூர் அருகே பாய்லர் வடிவிலான மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கியது.

Update: 2022-12-11 20:20 GMT

சென்னை,

சென்னை எண்ணூர் கடற்கரையில் நேற்று அதிகாலை, பாய்லர் போன்ற வடிவத்தில் இருந்த மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் வந்து அந்த பொருளை ஆய்வு செய்ததில், அது கப்பலுக்கு வழிகாட்டும் 'போயா' எனப்படும் மிதவை இயந்திரம் என்பது தெரியவந்தது. இது எந்த கப்பலைச் சேர்ந்தது என்பதை கண்டறிவதற்கான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்