அரசு கட்டிடத்தை இடித்த மர்ம நபர்கள்

அரசு கட்டிடத்தை மர்ம நபர்கள் இடித்தனர்.;

Update:2022-09-09 02:38 IST

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஒக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கைகாட்டி பிரிவு சாலையருகே 15 ஆண்டுகளுக்கு முன் மின் மோட்டார் இயங்குவதற்காக கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் அதன் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் பழைய கட்டிடத்தை மர்ம நபர்கள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். ஊராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அனுமதியின்றி அரசுக்கு சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்