தேசிய மாணவர் படை முகாம் தொடங்கியது

தர்மபுரி ஜெயம் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை முகாம் தொடங்கியது.

Update: 2022-08-23 19:30 GMT

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி- கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் தர்மபுரி நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பட்டாலியன் கேப்டன் கமாண்டர் தினேஷ் ராஜா இந்த பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு ராணுவ அதிகாரிகளை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் சமூக சேவை ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த முகாம் வருகிற 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை ஜெயம் கல்லூரி முதல்வர் சுப்பராயன், தேசிய மாணவர் படை அலுவலர் முருகன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்