ஆர்ய வைஸ்ய மகாசபா சார்பில், வேடசந்தூர் மார்க்கெட் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவின் 3-ம் நாளான நேற்று சிவபூஜையில் மீனாட்சி அம்மன் உள்ளது போல உற்சவர் சிலைகள் தயாரித்து அலங்கரிக்கப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் அந்த சிலைகளுக்கு, மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல பல்வேறு விதமான கொழு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.