சித்தோடு அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
சித்தோடு அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலியானாா்;
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மொனசியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் நாற்று நடவுக்காக ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் கொளத்துப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள ஒரு வீட்டு வாசலில் ராஜேந்திரன் உள்ளிட்டோர் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கட்டுவிரியன் பாம்பு ராஜேந்திரனின் காலில் கடித்துவிட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.