விருதுநகர் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்

விருதுநகர் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2023-06-28 19:31 GMT


விருதுநகர் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திறப்பு விழா

விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடம் ரூ. 3 கோடியே 9 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 2 தளங்களுடன் 17,327 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இக்கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

புதிய கட்டிடங்கள்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள், அரசு அலுவலகங்களுக்கு வந்து எளிதாக தங்களுக்கான சேவைகளை பெற்று செல்ல வசதியாகவும், அரசு அலுவலர்கள் வசதியாக பணியாற்றவும், அரசு கட்டிடங்களுக்கு புதிய கட்டிடங்களை கட்டித்தருகிறார்.

அந்த வகையில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு இந்த புதிய கட்டி டத்தை கட்டி தந்துள்ளார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். விழாவில் மாணிக்கம் தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ., பஞ்சாயத்துயூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் தண்டபாணி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்