திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
கந்திகுப்பம் அருகே திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.;
பர்கூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சூலமலை கருக்கன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவா் அன்பரசன். லாரி டிரைவர். இவருடைய மனைவி நிஷா (வயது 18). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் நிஷா கிருஷ்ணகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.