சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா
சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா நடந்தது.;
வளவனூர்,
வளவனூர் அருகே சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மூலவர் அங்காளம்மன், ஆனந்தாய் மற்றும் பூங்காவனம் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.