தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-05-20 18:00 GMT

செயல்படாத குடிநீர் மையம்

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் மாநகராட்சியின் சார்பில் பயணிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் மையம் செயல்படாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர். மேலும் கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குடிநீர் மக்களின் அத்தியாவசிய ஒன்றாக உள்ளது. எனவே அதிகாரிகள் ெசயல்படாமல் உள்ள இந்த குடிநீர் மையத்தை பயணிகள் பயன்பாட்டிற்கு ெகாண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள்ராஜ், மதுரை.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வரும் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீரை காசுகொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ், ராமநாதபுரம்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சதுர்வேதமங்கலம் கிராமத்தில் கல்லூரணி ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் குப்பைகள் தேங்கி தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு ஊருணிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஊருணியில் தேங்கிய குப்பையை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதன், சிங்கம்புணரி.

வீணாகும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் குடிநீர் இணைப்பு வசதி பெற்றிருக்கும் மக்கள் சிலர் தங்களது குடிநீர் குழாய்களுக்கு மூடி போடாமல் இருப்பதால் குடிநீர் வரும்போது அதிகளவு குடிநீர் வீணாகிறது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் மூடிபோடாமல் உள்ள வீடுகளுக்கு தகுந்த அபராதம் விதித்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

ராஜா, விருதுநகர்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பஸ், இருசக்கர வாகனங்கள் சென்றுவர சிரமமாக உள்ளது. மேலும் சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

கண்ணாயிரமூர்த்தி, மதுரை.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் நகரின் சில பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சேதமடைந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட சில சாலைகளில் கரடு, முரடான பகுதியில் வாகனங்களை இயக்குவதால் வாகனங்களும் பழுதாகுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

விக்னேஷ், ராமநாதபுரம்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் பாவாலிநகர், ராமமூர்த்திநகர் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது. நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இந்த நாய்களால் இருசக்கர வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபி, விருதுநகர்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து நாடாமங்கலம் வழியாக சிவகங்கைக்கு இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. இந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமகிருஷ்ணன், சிவகங்கை.

வேகத்தடை வேண்டும்

மதுரை மாவட்டம் செல்லூர் பாலம் ஸ்டேஷன் தத்தனேரி சுரங்கப்பாதையில் உள்ள சாலையில் சிலர் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகின்றது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலைப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

சந்தனகுமார், மதுரை.

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் மேலூர் திருவாதவூர் ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் செல்லும் வழியில் சாலையின் வளைவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஒரு பகுதியில் சிலாப் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் திறந்த நிலையில் உள்ள சாக்கடைக்குள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி சாக்கடையின் மீது சிலாப்போட்டு மூடிட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கோவன், மேலூர்.

Tags:    

மேலும் செய்திகள்