கிறிஸ்துமஸ் விடுமுறை: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படைகளில் சுமார் 10,000 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.;

Update:2025-12-24 16:25 IST

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப்படைகளில் சுமார் 10,000 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினசரி சுழற்சி முறையில் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்றும் (24.12.2025), நாளையும் (25.12.2025) மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் மற்றும் விசைப்படகு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்