பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

ஆரணியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை நகரமன்ற தலைவர் வழங்கினார்.;

Update:2023-09-23 18:28 IST

ஆரணி

ஆரணி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பாக பழைய பஸ் நிலையம் வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது.

ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் பா.இந்திரராஜன் தலைமை தாங்கினார்.

முகாமை ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இதல் ஆரணி நகர ரெட்கிராஸ் சங்க தலைவர் குருராஜராவ், செயலாளர் சண்முகம், பொருளாளர் தமிழ்செல்வன், துணைத்தலைவர், அக்பர்பாஷா, நிர்வாகிகள். பொன்னுசாமி. ஆசிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்