மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை தாமதமின்றி வழங்க நடவடிக்கை- அமைச்சர்‌ அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்‌ அன்பில் மகேஷ் பொய்யாமொழி;

Update:2022-10-16 01:27 IST

தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடந்தது. அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி முகாமை தொடங்கி வைத்தார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் தாய்மொழியாம் தமிழ் தான். தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது. வரும் நவம்பர் முதல் வாரத்திற்குள்ளாக சீருடை உள்ளிட்ட பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும். டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக புத்தகப்பை வழங்குவதற்கான பணிகளை தொடங்கி ஜனவரி மாதத்திற்குள்ளாக வழங்கி விடுவோம். அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்து 2 வாரத்திற்குள்ளாக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை, புத்தகப்பை ஆகியவை தாமதம் இல்லாமல் வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி நீலமேகம், துரை.சந்திரசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்