கருமத்தம்பட்டி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஷன் குமார் (வயது 21). இவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர் பாளையத்தில் தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்தப் பெண் ரோஷன் குமாரிடம் பேசாததால் சம்பவத்தன்று அவர் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.