வடமாநில தொழிலாளி கீழே விழுந்து சாவு

கங்கைகொண்டானில் வடமாநில தொழிலாளி கீழே விழுந்து இறந்தார்.;

Update:2023-09-09 00:56 IST

நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அதில் ஒரு தொழிற்சாலையில் இமாசலபிரதேசத்தை சேர்ந்த பகவான் தாஸ் மகன் மஞ்சீஸ் குமார் (வயது 48) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 4-ந்தேதி மஞ்சீஸ் குமார், ஆலை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி இரும்பு ஏணியில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மஞ்சீஸ்குமார் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்