எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி

அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடந்தது;

Update:2023-03-23 00:15 IST

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிைல பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆசிரியர் சவுந்தர பாண்டியன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்களின் முன்பு தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக எண்ணும் எழுத்தும் பாட புத்தகத்தில் உள்ள பாடல்கள், கதைகள், போன்றவற்றை 'என் மேடை என் பேச்சு' என்ற தலைப்பில் செய்து காட்டினர். ஆசிரியை அனுசியா வகுப்பறைகளில் வைக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்