செல்போனில் பெண்ணிடம் ஆபாச பேச்சு; ராணுவ வீரர் கைது
திருவேங்கடம் அருகே செல்போனில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.;
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள உமையத் தலைவன்பட்டி கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் சுப்புராம் (வயது 27). ராணுவ வீரரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் சுப்புராம், ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அந்த பெண் பலமுறை கண்டித்தும், தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடமும், குடும்பத்தினரிடமும் கூறி கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து திருவேங்கடம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி, சுப்புராமை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.