தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் 122 நிறுவனங்களில் தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்;

Update:2023-02-02 03:12 IST

தஞ்சாவூர்;

தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை தொழிலாளர்துறை முதன்மை செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான ஆனந்த் உத்தரவுபடி திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபால், தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரைகளின்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், சட்டமுறை எடையளவு சட்டம், சட்டமுறை எடையளவு சட்டம் (பொட்டலப்பொருட்கள்) மற்றும் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் 122 நிறுவனங்களில் ஜனவரி மாதத்திற்கான கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 37 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்