நீர், நிலவள திட்டம் குறித்து அதிகாரி ஆய்வு

தியாகதுருகம் அருகே நீர், நிலவள திட்டம் குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-05-07 18:45 GMT

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி அணைக்கட்டு பகுதியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நீர்வள, நிலவள திட்ட இயக்குனரும், கூடுதல் தலைமை செயலாளருமான ஜவகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாய விதை உற்பத்தி குழுவின் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் திட்டத்தின் பயன்பாடுகள், குழுவின் மூலம் பசுந்தாள் விதை உற்பத்தி, விவசாயத்தில் பசுந்தாள் பயிரின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார்.தொடர்ந்து விவசாய நிலங்களில் பசுந்தாள்கள் பயிர் செய்து அவற்றை மடக்கி உழவு செய்த பிறகு மீண்டும் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். இதன் மூலம் பயிர்களுக்கு தேவையான சத்துகள் இயற்கையாக கிடைக்கும். மேலும் ரசாயன உர பயன்பாட்டினை குறைத்து, பயிர்களில் கூடுதல் மகசூல் பெற முடியும் என ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, துணை இயக்குனர்கள் விஜயராகவன், சுந்தரம், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, அலுவலர் வனிதா, துணை அலுவலர் அன்பழகன், நீர் வளத்துறை அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்