மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

இ-சேவை மையத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-10-10 19:02 GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதில் தகுதி இருந்து விண்ணப்பித்த நிறைய பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை ேகட்டு, ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் சிறப்பு இ சேவை மையத்தில் விண்ணப்பிக்க 200-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். இந்நிலையில் சிறப்பு இ-சேைவ மையத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மோகன்ராஜ், வம்பன் வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல், வம்பன் துணை வேளாண் அலுவலர் ஜெய்குமார் ஆகியோர் ஆன்லைன் சர்வர் பிரச்சினை குறித்தும், விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பெண்களிடம் கோட்டாட்சியர் முருகேசன் கூறுகையில், உரிமைத்தொகை திட்டத்தில் மாவட்டத்தில் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளனர். எல்லோருக்கும் அரசு அறிவித்தபடி உரிமைத்தொகை கிடைக்கும். சர்வர் பிரச்சினை தான் காரணம் வேறு ஒன்றும் கிடையாது. கொஞ்சம் பொறுமையாக இருந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள், கண்டிப்பாக அவரவர் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும் என்று கூறினார். அப்போது ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்