சுருளி அருவி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

சுருளி அருவி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-01-31 19:00 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளமாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று சுருளி அருவியில் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகமணிவெங்கடேசன் தலைமையில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உரிமையாளர்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன், ஊராட்சி செயலர் ஈஸ்வரன், ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்