பி.ஏ.பி. வாய்க்காலில் மூதாட்டி பிணம்

பி.ஏ.பி. வாய்க்காலில் மூதாட்டி பிணம்;

Update:2023-02-21 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே வசியாபுரம்-மோதிராபுரம் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் மூதாட்டி பிணமாக மிதப்பதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், பிணத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிணமாக மிதந்தது பொள்ளாச்சி அருகே உள்ள ஜல்லிபட்டியை சேர்ந்த ராஜன் என்பவரது தாயார் லட்சுமி(வயது 85) என்பதும், வாய்க்காலுக்கு குளிக்க சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்