முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

சுரண்டை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-07-13 00:30 IST

சுரண்டை:

சுரண்டை அருகே கடையாலுருட்டி காளீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 75). இவர் மின்சார வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நீண்ட நாட்களாக இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது மாணிக்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்