ஆயுத பூஜையையொட்டி சத்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு; மல்லிகைப்பூ கிலோ ரூ.945-க்கு ஏலம்
ஆயுத பூஜையையொட்டி சத்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.945-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்
ஆயுத பூஜையையொட்டி சத்தி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.945-க்கு ஏலம் போனது.
மல்லிகை ரூ.945
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 7 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.945-க்கும், முல்லை ரூ.880-க்கும், காக்கடா ரூ.975-க்கும், செண்டுமல்லி ரூ.40-க்கும், பட்டுப்பூ ரூ.90-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.280-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.360-க்கும் ஏலம் போனது.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஆயுத பூஜையையொட்டி அனைத்து பூக்களுமே விைல உயர்ந்திருந்தது. மேலும் கர்நாடகாவுக்கு அதிக அளவில் பூக்கள் தேவைப்பட்டதால், கர்நாடக வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பூக்களை வாங்கிச்சென்றார்கள். பூக்கள் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதபூஜை சமயத்தில் பூக்கள் விலை உயரவில்லை. இந்த அண்டு அனைத்து பூக்களுமே விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.