ஒரு கிலோ தக்காளி ரூ.38-க்கு விற்பனை

ஒரு கிலோ தக்காளி ரூ.38-க்கு விற்பனை;

Update:2023-06-15 17:24 IST

திருப்பூர், 

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.38-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வரத்து குறைவு

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு பெங்களூரு, மைசூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தக்காளி வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.38-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் சுரைக்காய் விற்பனைக்கு அதிகமாக வந்திருந்தது. நேற்று பாகற்காய் விலை புதிய உச்சத்தை எட்டியது.

காய்கறிகளின் விலை நிலவரம்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:- 28 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.900-க்கும், 20 கிலோ எடை கொண்ட பாகற்காய் மூட்டை ரூ.1200-க்கும், 15 கிலோ எடை கொண்ட புடலங்காய் கட்டு ரூ.250-க்கும், 17 கிலோ எடை கொண்ட சுரைக்காய் பை ரூ.250-க்கும், 15 கிலோ எடை கொண்ட பீர்க்கங்காய் கட்டு ரூ.700-க்கும், 30 கிலோ எடை கொண்ட பீட்ரூட் மூட்டை ரூ.700-க்கும், 17 கிலோ எடை கொண்ட வெண்டைக்காய் மூட்டை ரூ.450-க்கும், ஒரு கிலோ செடி முருங்கை ரூ.45-க்கும், 50 கிலோ எடை கொண்ட மாங்காய் மூட்டை ரூ.1200-க்கும், 24 கிலோ எடை கொண்ட சின்னவெங்காயம் மூட்டை ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் விலை சற்று அதிகரித்தே காணப்பட்டது.

=

Tags:    

மேலும் செய்திகள்