ராகுல்காந்தி யாத்திரை ஓராண்டு நிறைவு:தூத்துக்குடியில் காங்கிரசார் ஊர்வலம்
ராகுல்காந்தி யாத்திரை ஓராண்டு நிறைவுநாளை முன்னிட்டு வியாழக்கிழமை தூத்துக்குடியில் காங்கிரசார் ஊர்வலம் நடத்தினர்.;
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு ஒரு வருடம் நிறைவு பெற்றதை முன்னிட்டு நாடு தழுவிய ஊர்வலம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது. அதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று மாலையில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. எம்.பி.சுடலையாண்டி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே தொடங்கிய ஊர்வலம், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. இதில் மாநில வக்கீல் பிரிவு இணைத்தலைவர் வக்கீல் மகேந்திரன், மண்டல தலைவர்கள், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க மாநில செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.