புனரமைக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா

இளையான்குடி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 3, 4 புனரமைப்பு பள்ளி கட்டிட திறப்பு விழா அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.;

Update:2023-03-19 00:15 IST

இளையான்குடி,

இளையான்குடி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 3, 4 புனரமைப்பு பள்ளி கட்டிட திறப்பு விழா அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.

எழுச்சிமிகு இளைஞர் அமைப்பை சேர்ந்த தவுலத்கான் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் முகம்மது, ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன், வெங்கட்ராமன், கூட்டுறவு வங்கி தலைவர் தமிழரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அன்பரசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சைபுநிஷா பேகம், ராவியத்துல் பதவியாள், மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சாதிக் அலி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை எழுச்சிமிகு இளைஞர்கள் அமைப்பு, புதூர் பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் செய்திருந்தார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்