கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி
கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.;
திமிரி
கலவை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.
கலவை பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒட்டு மொத்த தூய்மை பணி நேற்று நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ் தலைமைதாங்கி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கலவை பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.