நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்

ஆனைமலையில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-28 18:45 GMT

ஆனைமலை,

ஆனைமலை தாலுகாவை சுற்றியுள்ள கோட்டூர், வேட்டைக்காரன் புதூர், ஒடையகுளம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் கோ 51, ஏ.எஸ்.டி. 16, ஏ.டி.டி. 36 உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்தனர். தற்போது நெல் அறுவடை பருவத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,160 மற்றும் பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115 என அரசு கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கு தேவையான ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், ஆதார், அடங்கல் நில உரிமையாளர் ஆவணத்தை கொண்டு விவசாயிகள் பதிவு செய்யலாம். மேலும் 17 சதவீதம் தான் ஈரப்பதம் இருக்க வேண்டும் என அரசு நிர்ணயித்து உள்ளது. நேற்று 11 விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்