ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.;
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் மூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் வரவு-செலவு கணக்குகள் வாசித்து, ரூ.50 லட்சம் செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் போக்குவரத்து துறை மேலாளர் கமலக்கண்ணன், வேளாண்மை விரிவாக்க விதை அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.