ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்

செல்போன் செயலி மூலம் ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என வருங்கால வைப்புநிதி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.;

Update:2023-01-18 03:19 IST

வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் தங்களது கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து வந்தனர். உரிய நேரத்தில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளையையோ, அருகில் உள்ள தபால் நிலையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஆனால் சிலருக்கு கைரேகை அல்லது கருவிழி அடிப்படையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை. ஆகவே ஓய்வூதியதாரர்கள் தங்களது மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மற்றொரு வழிமுறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஓய்வூதியதாரர்கள் தங்களின் முகத்தோற்றம் மூலமாக உயிர்வாழ் சான்றிதழை புதுப்பிக்க முடியும். அதற்கான செயலியை மத்திய அரசு "பென்சன் மற்றும் பென்சனர் நல்வாழ்வு துறை" மூலமாக அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் "AadhaarFace App". ஓய்வூதியதாரர்கள் இந்த செயலியை தங்கள் ஆண்டிராய்டு போன் மூலமாக கூகுள் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்து அதன்பின்னர் Jeevan Pramaan Face Application என்ற மென்பொருளையும் பதிவிறக்கம் செய்து உரிய காலத்தில் உயிர்வாழ் சான்றிதழை புதுப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை நெல்லை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சச்சின் டி.ஷெட்டி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்