சாலையில் மழைநீர் கடல் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

படப்பை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-03 08:58 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள வைப்பூர் காரணைத்தாங்கல் பகுதியில் வாலாஜாபாத் - வண்டலூர் செல்லும் 6 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு கடல் போல மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிறமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக செல்கிறது. வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் கடும் அவதி படுகின்றனர். இதேபோல காரணைத்தாங்கல் படப்பை, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கி வடியாமல் உள்ளது. எனவே சாலையில் கடல் போல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்