தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு-மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது

Update:2023-02-10 00:15 IST

தர்மபுரி:

நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிராக உருதிமொழியை ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பழனிதேவி (பொது), நசீர் இக்பால் (நில அளவை), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்