பிளஸ்- 2 மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

பிளஸ்- 2 மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-07 19:18 GMT

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது, மாணவர்கள் தங்களது இலக்கை அடைய முதலில் அந்த செயலில் ஆர்வம் தேவை. அதன் பின்னர் முழு ஈடுபாடு வேண்டும்.

நீட் போன்ற போட்டி தேர்வுகளில் தொடர்ச்சியான பயிற்சிகளினால் மட்டுமே வெற்றி பெற முடியும். போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் பயிற்சி பெற வேண்டும். சில நேரங்களில் ஒரு சில மதிப்பெண்கள் குறைவால் பெரிய வாய்ப்புகள் தவறிவிடுகிறது. அதனால் கூடுதல் மதிப்பெண்கள் பெற கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். 20 சதவீதம் பேர் மட்டுமே இலக்கை அடைய கடுமையாக உழைக்கிறார்கள்.

திறமையின் மூலமே வெற்றி கிடைக்கும். யார் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்கிறார்களோ? அவர்கள் அதில் வெற்றி பெறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்