நெல்லையில் கல்குவாரி அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை திசையன்விளையிலும் சோதனை நடத்த முயன்றதால் பரபரப்பு

நெல்லையில் கல்குவாரியில் உள்ள அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திசையன்விளையிலும் சோதனை நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-05-20 03:44 IST

நெல்லை:

நெல்லையில் கல்குவாரியில் உள்ள அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திசையன்விளையிலும் சோதனை நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்குவாரி விபத்து

நெல்லை அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். அதில் 5 பேர் மீட்கப்பட்டதில், 3 பேர் இறந்துவிட்டனர். மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே குவாரி உரிமையாளரான செல்வராஜ் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது.

அதிரடி சோதனை

இந்த நிலையில் நேற்று மாலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் கல்குவாரியில் அமைந்துள்ள செல்வராஜூக்கு சொந்தமான அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? என்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ேசாதனை இரவு வரை நீடித்தது.

இந்த ஆய்வின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், தருவை கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

தனிப்படை கேரளா விரைந்தது

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள செல்வராஜ், அவருடைய மகன் குமார் ஆகியோரை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

செல்வராஜ், குமார் ஆகியோர் கேரளா மாநிலம் மூணாறு, வண்டிப்பெரியார் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர்.

திசையன்விளையில் பரபரப்பு

இதற்கிைடயே நேற்று உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் போலீசார் திசையன்விளையில் உள்ள குமார் வீட்டை சோதனையிட சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டுமே வெளியில் இருந்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்ய போலீசார் முயன்றனர். அவர்களால் பூட்டை உடைக்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ெதாடர்ந்து அவர்கள் போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் வீட்டின் பூட்டை உடைக்க முயன்ற போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து திசையன்விளை பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர். குமார் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்