சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றிய போலீசார்

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் அடிப்பகுதியிலும், சர்வீஸ் சாலையிலும் உள்ள அக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்.

Update: 2023-06-26 19:30 GMT

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் அடிப்பகுதியிலும், சர்வீஸ் சாலையிலும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோர கடை நடத்தி வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கடைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். எனவே வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக வியாபாரிகள் சமீபத்தில் மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் மீண்டும் மேம்பாலத்தின் அடிப்பகுதியில், ஆக்கிரமிப்பு செய்து சாலையில் கடைகளை வைத்து வருகின்றனர். நேற்று மேம்பாலத்தின் அடியில் கடை வைக்க இடம் பிடிப்பதில் வியாபாரிகளிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மேம்பாலத்தின் அடியில் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்