பரமத்திவேலூரில் திருநாவுக்கரசர் குருபூஜை விழா

Update:2023-04-17 00:15 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தையொட்டி திருநாவுக்கரசர் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி திருநாவுக்கரசர், அப்பூதியடிகள், சண்டிகேஸ்வர பெருமான், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் மும்மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருஞான சம்பந்தர் மடாலயத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்