தென்காசி, செங்கோட்டை, சுரண்டை பகுதியில் 6-ந் தேதி மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஊத்துமலை, ஆலங்குளம், கீழப்பாவூர் பகுதியில் 6-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.;

Update:2022-08-03 22:12 IST

ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 6-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டனை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கனாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம், கழுநீர்குளம், அடைக்கலப்பட்டினம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இதேபோல் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளையொட்டி தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டினம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

கடையநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட புளியங்குடி, வீரசிகாமணி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக புளியங்குடி, சிந்தாமணி, ஐயாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திரிவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேலபுளியங்குடி, வீரசிகாமணி, பட்டாடைபட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில், வெண்டிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவகுறிச்சி பகுதிகளில் அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வினியோக செயற்பொறியாளர்கள்  கற்பகவிநாயக சுந்தரம் (தென்காசி), மாரியப்பன் (கடையநல்லூர்), தங்கராஜ் (சங்கரன்கோவில்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்