பாலுசெட்டிசத்திரம் பகுதியில் நாளை மின்தடை
பாலுசெட்டிசத்திரம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.;
காஞ்சீபுரம் தெற்கு கோட்டத்தில் உள்ள தாமல் துணை மின் நிலையம் மற்றும் முசரவாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
அதனால் பாலுசெட்டிசத்திரம், தாமல், வதியூர், கிளார், களத்தூர், அவளுர், ஒழுக்கோல்பட்டு, பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லூர், ஜாகீர்தண்டலம், பனப்பாக்கம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிறுணை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் தடைப்படும் என செயற்பொறியாளர் பிரசாத் அறிவித்துள்ளார்.