வாயு கசிவு காரணமாக கர்ப்பிணிகள் புறநோயாளிகள் பிரிவுக்கு மாற்றம்

பாணாவரம் சுகாதார நிலையத்தில் வாயு கசிவு காரணமாக கர்ப்பிணிகள் புறநோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.;

Update:2023-09-12 00:25 IST

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.

குறிப்பாக கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள் குழந்தைகளுடன் தங்கி சிகிச்சை பெற தனி வார்டுகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் தங்கியுள்ள வார்டில் திடீரென்று வாயு கசிந்ததாகவும், இதனால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்பு அவர்கள் அனைவரும் புறநோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

இதுக்குறித்து வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷவாயு தடுப்பு கருவி உதவியுடன் பிரசவ மற்றும் ஆபரேஷன் வார்டு களில் சோதனை செய்தனர். ஆனால் வாயு கசிவு எவ்வாறு ஏற்பட்டது குறித்து எந்த காரணமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் ஆஸ்பத்தரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்