தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை;

Update:2022-09-01 02:27 IST

பாளையங்கோட்டை பெருமாள்புரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 51). இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இவருடைய தாயார் இறந்து விட்டார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் ஜெகநாதன் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்