ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி பஸ்

தானிப்பாடி அருகே ஆற்று வெள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் சிக்கி கொண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.;

Update:2023-10-12 22:29 IST

தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே ஆற்று வெள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் சிக்கி கொண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.

தனியார் பள்ளி பஸ்

தண்டராம்பட்டு அருகே தானிப்பாடியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதற்காக பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் காலையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பின்னர் மாலையில் அவர்களுடைய வீட்டில் விடுவது வழக்கம்.

அதன்படி நேற்று  காலை வலசை கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஏழுமலை (வயது 35) என்பவர் பள்ளி பஸ்சை ஓட்டி சென்றார்.

ஆற்றில் சிக்கியது

தானிப்பாடி அருகே பீமாரபட்டி கிராமத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.

மேல்வலசை, கீழ்வலசை, செம்மம்பட்டி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்தது. பாம்பாறு வழியாக சென்றபோது அங்குள்ள ஆற்று தண்ணீரில் சென்று விடலாம் என்று நினைத்து டிரைவர் பஸ்சை ஓட்டினார்.

அப்போது திடீரென பஸ்சில் பழுது ஏற்பட்டு ஆற்றில் சிக்கி கொண்டு நின்றுவிட்டது.

உடனடியாக பாம்பாற்றின் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

மேம்பாலம் கட்ட வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில். பழுதடைந்த பஸ் கடந்த 10 தினங்களாக இப்படித்தான் இந்த பஸ் நிறுத்தத்தில் பழுதடைந்து நிற்கிறது. பொதுமக்கள் தான் நாள்தோறும் பஸ்சை தள்ளி விடுவோம்.

இதனை சரி செய்ய வேண்டும் என்று டிரைவரிடம் கூறி உள்ளோம். மேலும் பாம்பாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று மனு அளித்து இருக்கிறோம். பாலம் கட்டினால் தான் இப்படிப்பட்ட விபத்துகளை தவிர்க்க முடியும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்