பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை பதிவாளர் சுற்றறிக்கை

பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை விதித்து பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Update: 2022-06-03 21:21 GMT

கருப்பூர், 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த மாதம் சேலம் பெரியார் பல்கலை கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவின் பெயரில் பதிவாளர் (பொறுப்பு) கோபி, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெரியார் பல்கலைக்கழக வளாகம் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் அரசியல் சார்ந்த பரப்புரை நடத்த அனுமதிக்கக்கூடாது. இது தொடர்பாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி ஆலோசனை வழங்க வேண்டும். மாணவர்கள் முழு கவனத்தையும் கல்வி பயில்வதில் கவனம் செலுத்தும் வகையில் கல்லூரிகள் நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பான சூழலில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என்பதை பெற்றோர்களும், பொதுமக்களும் உறுதிப்படுத்தவேண்டும்

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்