தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபசாரம்; பணியாளர் கைது

தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபசாரம் செய்த பணியாளர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-06 02:04 IST

சமயபுரம்:

சமயபுரம் பகுதியில் உள்ள சில தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர், போலீசாருடன் தங்கும் விடுதிகளில் திடீரென சோதனை செய்தனர். அப்போது சமயபுரம் புதுத்தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக அந்த தங்கும் விடுதி பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்